பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் செவ்விளநீர், பச்சை நிற இளநீர்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களான சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் தேவை ...

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக ...

22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி: 2 பேர் கைது கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின் பேரில் தங்க கட்டி வாங்கி சென்று தங்க ...

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது. ...

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களின் ( Electric Two-wheelers) விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் வெறும் 68,324 எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த நவம்பர் மாதம் 76,163 ஆக உயர்ந்துள்ளது. இது சிறப்பான வளர்ச்சியாகும். இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிக ...

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள்-ன் அடுத்தகட்ட வளர்ச்சி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டது தான். இந்த நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் ஏற்கனவே இந்தியாவில் பல பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தாலும் அதில் அடுத்தகட்டமாக இந்தியாவில் தனது முக்கியமான கன்ஸ்யூமர் ...

கோவை -போத்தனுார் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை டிச.16 -ந்தேதி மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை -கோவை விரைவு ரயில் (16722) போத்தனுார் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் கோவை – மதுரை விரைவு ரயிலும் (16721) நாளை டிச., 16 ல் போத்தனுாரில் இருந்து ...

கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்க வில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ...

புதுடெல்லி: உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் மத்திய அரசு உருவாக்கியுள்ள பாதுகாப்பு தொழில் முனையங்களில் ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த முனையங்கள் நிறுவனங்கள் மூலம் ரூ.6,200 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. அதன்படி, உத்தர பிரதேச பாதுகாப்பு தொழில் முனையங்களில் (யுபிடிஐசி) ரூ.2,422 கோடி ...

கடந்த 1857-ம் ஆண்டு பனாமா பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு கப்பல் சென்றது. இந்த கப்பலில் 425 பேர் சென்ற நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி கப்பல் திடீரென தண்ணீரில் மூழ்கியது. இந்த கப்பல் வட கரோலினா பகுதியில் பகுதியில் மூழ்கிய நிலையில் சுமார் 165 வருடங்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து உலகின் ...