கோவை புறநகர் மாவட்டத்தில் 35 காவல் நிலையங்கள் உள்ளன .அந்த பகுதிகளில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும், போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியை மேற்கொள்ளவும் புதிய இருசக்கர வாகன ரோந்து தொடக்க நிகழ்ச்சி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது . இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார். ரோந்து வாகனங்களை கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் .பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, பேரூர், பொள்ளாச்சி ஆகிய உட்கோட்ட பகுதியில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து செல்லவும், 73 இருசக்கர ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 8 மணி நேரம் வீதம் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்..
Leave a Reply