கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கோவை வழியாக மைசூர் – கொச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் மைசூர் – கொச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து டிசம்பா் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் மைசூரு – கொச்சுவேலி விரைவு ரயில் (எண்: 06211) மறுநாள் இரவு 7.20 மணிக்கு கொச்சியை சென்றடையும். கொச்சியில் இருந்து டிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்குப் புறப்படும் கொச்சி – மைசூர் விரைவு ரயில் (எண்: 06212) மறுநாள் இரவு 7.15 மணிக்கு மைசூரைச் சென்றடையும். இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூர், பெங்களூரு, கெங்கேரி, மாண்டியா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.