கோவை விமான நிலையத்தில் தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு தினமும் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ...
தொழில் போட்டி: அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட தனியார் பேருந்துகள் – அதிர்ச்சியில் கோவை பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக பேருந்துகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் ...
அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம் பங்குச்சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதித்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை ஆய்வறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ...
வங்கி ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த ...
வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம். அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதனை ஒரு சில மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுதும் கொண்டுவர முடியாது என்று கூறிய ராஜஸ்தான் ...
கோவை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில், சென்னை சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின்படி கோவை கூடுதல் தொழிலாளர் துறை ஆணையாளர் குமரன் வழிகாட்டுதலின்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுரையின் பேரில் கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ...
அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட வாடகை கடைகளில் பல கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவிற்கிணங்க வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி ...
கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு ( எஸ். ஐ .சி )உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பார்த்திபன். இவர் கோவை மாநகர நூண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராகவும், பின்னர் சிங்காநல்லூர் சட்டம் – ஒழுங்கு உதவி போலீஸ் கமிஷனராகவும் மாற்றப்பட்டார். இந்த இடம் காலியாக இருந்தது. அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு ...
புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ...
கோவை: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மூலிகை செடிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1,500 மதிப்புள்ள 10 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள ...













