வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்… மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்.!!

ந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம். அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி.

மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதனை ஒரு சில மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுதும் கொண்டுவர முடியாது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது நடைமுறைப்படுத்தி அடுத்த மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அந்த வகையில் மத்திய அரசிடம் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதி திட்டத்தை செயல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி இதற்கு முன்பே பழைய ஓய்வூதிய திட்டம் மோடி கொண்டு வரலாம் என கூறுகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது குறிப்பிட்ட சில அரசு ஊழியர்களுக்கு மட்டும் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் மத்திய துணை ராணுவ படையில் உள்ளவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் ராணுவ படை என்பதால் இவர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் இவர்கள் மட்டுமே தற்பொழுது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளது. அதேபோல இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தால் ராணுவர்கள் பலர் பயன் அடைவர் என்று கூறுகின்றனர்.