சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து ...
சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் ...
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான அத்தியாவசிய பேருந்து சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் ...
கோவை: தமிழ்நாடு அரசு நேற்று பிறப்பித்த உத்தரவின் மூலம் 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள்,போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர். அதன்படி நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த மோகன் நவாஸ் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு 64 ...
சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது. ...
சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டம் பல மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி சென்னை – மைசூரு இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன்படி, காலை 5.40 மணிக்கு சென்னை ...
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக உள்ளது’ என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இன்று சென்னை லயோலோ கல்லூரியில் நடந்த ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம்’ என்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ...
அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை ...
கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24). பிஏ பட்டதாரியான இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டில் இருந்த தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே ...













