நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர்

நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர்

நியாய விலை கடையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை பூ மார்க்கெட், தெப்பக்குளம் வீதி, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள நியாய விலை கடைகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்த பதிவு ஆகியவற்றை ஆய்வு செய்து அங்குள்ள இயந்திரத்தை இயக்கி ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு வகை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்குமாறு நியாய விலை கடை விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கோவை வடக்கு வட்ட வழங்கல் அலுவலர் சுசிரேகா உடன் இருந்தார்.