தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை வர்த்தக மையத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கக்கிறார் இதனை கோவையில் PSG கல்லூரி , கொங்குநாடு கல்லூரி, காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் 30 மேல் நிலைப் பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பீளமேடு டைட்டில் பார்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை ...

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் தரவுகளின்படி இந்தியா மற்றும் ஆசியாவின் 2024-ம் ஆண்டில் ஆசியாவில் மற்றும் இந்தியாவின் முதல் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இடம் பிடித்துள்ளார். இதுவரை இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக, கௌதம் அதானி ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு ...

சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி ...

கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.மு.மு.க பிரமுகர் கைது  கோவை,  செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அலுமினிய வியாபாரியான ரவிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையிலே கண்ணனுக்கு ...

கோவை பேரூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...

குவாரி கிரசர்களில் கமிஷன் கேட்கும் புரோக்கர்கள்: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!!!   கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது. அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர் , டிப்பர் லாரிகள் , ஜே.சி.பி போன்றவற்றில் வசூல் வேட்டை ...

வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் ...

இருதரப்பு வர்த்தகத்திற்காக ரூபாய் மற்றும் திர்ஹாம்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஒப்பந்தம் உட்பட பல்வேறு காரணிகளால் 2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பும் பணம் 12.3 சதவீதம் அதிகரித்து 125 பில்லியன் டாலர்களை எட்டியது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஒப்பீட்டளவில், 2022 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பணம் ...

சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக ஒரே நாளில் ரூ. 9000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் ...

காவிரி நீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 200 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக அரசு காவிரி ...