கோவையில் பணம் செலுத்தி சென்ற பொது மக்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி – முன் அறிவிப்பு இல்லாமல் இரவோடு, இரவாக மூடப்பட்ட அஞ்சலகம்….

கோவையில் பணம் செலுத்தி சென்ற பொது மக்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி – முன் அறிவிப்பு இல்லாமல் இரவோடு, இரவாக மூடப்பட்ட அஞ்சலகம்….

கோவை பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் மசக்காளிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகத்தின் ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் வேலப்ப நாயுடு சின்னசாமி வரதராஜாமில் அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதியில் உள்ள மக்கள் இந்த அஞ்சலகத்தின் மூலமாக சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், அஞ்சலக காப்பீடு, வருங்கால வைப்புதொகை மற்றும் பல்வேறு சேவைகளை இப்பகுதி மக்கள் இந்த அஞ்சலகத்தின் மூலமாக பயன்பெற்று வந்தனர். பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஹோப் காலேஜ் திரு வி கா வீதியில் செயல்பட்டு வந்தது. பின்னர் மசக்காளிபாளையம் சாலைக்கு மாற்றப்பட்டது சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்ற அவுக்கு உள்ள மக்களுக்கு இந்த அஞ்சலகம் பயன்பட்டு வந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பு இன்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக தபால் நிலையத்தை மூடிவிட்டனர் திங்கட்கிழமை காலை அஞ்சலகத்துக்கு பணம் செலுத்துதல் மற்றும் பதிவு தபால் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வந்த பொதுமக்கள் அஞ்சலகம் மூடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா லோகு கூறும்போது :-

 

பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் உள்ள கல்லூரிகள் பள்ளிகள் தொழிற்சாலைகள் தனியா நிறுவனங்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ள வகையில் தபால் சேவை ஆற்றி வந்தது இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி இந்த அஞ்சலகம் மூடியது மிகவும் கண்டனத்திற்குரியது மேலும் இது குறித்து விசாரிக்கையில் உப்பிலிபாளையம் அஞ்சலகத்துடன் கிழக்கு துணை அஞ்சலகம் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது ஆனால் எந்தவித முன்னறிவிப்பின்றி பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தபால் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த அஞ்சலகம் மூடப்பட்டதா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது ஆகவே 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை அஞ்சலக மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவருக்கு மற்றும் முதன்மை கண்காணிப்பாளருக்கு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா.லோகு கடிதம் அனுப்பி உள்ளார்.