கோவை சுந்தராபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 48) இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த வேலுமணி ( வயது 39) என்பவர் பெண் வீட்டின் சம்மதம் இல்லாமல் காதல் திருமண செய்துள்ளார்.இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வேலுமணி நேற்று அங்குள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ...
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் அருகே சொக்கட்டாம்பள்ளி கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் மதியம் ...
கோவை போத்தனூர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 69). இவர் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இறைச்சி கடையில் 20 வருடங்களாக காசாளராக வேலை செய்து வருகிறார். அந்த இறைச்சி கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த கதிர்வேல் (21) என்பவர் இறைச்சி வெட்டும் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று ...
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன்(63). விவசாயி. இவரது மனைவி சரோஜா(55). கடந்த 21 ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ...
கார் குண்டு வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட நபர்களை பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணை. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ...
கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டை திருடி செல்லும் நபரின் சி.சி.டி.வி காட்சிகள்…. கோவை சாய்பாபாகாலனி பகுதியில் இரு வாகனம் ஒன்றின் மேல் அதன் உரிமையாளர் அவரது ஹெல்மெட்டை வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அலுவலக வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கையில் ஹெல்மெட் காணாமல் போயுள்ளது. சிறிது நேரம் அக்கம், பக்கத்தில் ...
கோவை துடியலூர் அடுத்த செங்காளிப்பாளையம் அருகே காந்தி காலனி உள்ளது. அங்கு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கட்சி கொடி கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் பா.ஜ.க.வின் கொடி கம்பம் அமைக்க அந்த பகுதியை சேர்ந்த கட்சியினர் முடிவு செய்தனர். இதையடுத்து கொடி கம்பம் அமைப்பதற்கான பணிகளை செய்து வந்தனர். அப்போது ஏ.டி ...
மேட்டுப்பாளையம் மட்டக்கார வீதியை சேர்ந்தவர் சலீம் என்கிற சதீஷ் (வயது 35). இவர் அன்னூர் ரோடு பகுதியில் உள்ள காய்கறி மைதானத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது நண்பரின் மொபட்டை எடுத்துக் கொண்டு சதீஷ் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் வெளியே மொபட்டை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மோசடி- வாலிபர் மீது புகார்..!
கோவையில் பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்காக ” பெட்டிஷன் மேளா ” நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர். இந்த நிலையில் கோவை சரக டி.ஐ .ஜி..முத்துசாமி நடத்திய முகாமில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி ( வயது 23) என்பவர் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவரிடம் கலெக்டர் ...
ஆந்திர மாநில சொகுசு கார் பெருமாள் கோவில் மீது மோதி விபத்து: கோவையில் பரபரப்பு… கோவை ஆலந்துறை அடுத்த செம்மேடு கிராமப் பகுதியில் உள்ள பழமையான பெருமாள் கோவில் பூண்டி சாலையில் உள்ளது. இந்த பழமையான பெருமாள் கோவில் மீது தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் மோதியதில் கோவில் சுவர் மற்றும் கருவறைகள் சேதம் ...