கோவை: மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் வளர்ப்பு பிராணிகள் கடை ஒன்று உள்ளது. இங்கு அனுமதியின்றி பவளப்பாறைகள் விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினம் குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு படையினர் மூலம் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ...
கோவையில் தொடரும் சந்தன மர கடத்தல் சம்பவம்- கும்பல் 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை..!
கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...
கோவை பீளமேட்டை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் நேற்று அவினாசி ரோட்டில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர் இங்கு அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் விருப்பப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி விபசாரத்திற்கு அழைத்தார். இதுகுறித்து அந்த வாலிபர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ...
கோவை : நடிகர் அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் நேற்று முன்தினம் கோவையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அதிகாலை 3 மணிக்கு சினிமா படம் வெளியிடக்கூடாது என்று மாநகர காவல் துறை தியேட்டர் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி அதிகாலை 3 மணிக்கு ...
கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பச்சாபாளையத்தில் ஒரு காலி இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருந்தது .இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவரின் ...
கோவை ஆர். எஸ் புரம் தேவாங்க பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று அஜித் நடித்த துணிவு படம் வெளியிடப்பட்டது . அங்கு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் முன் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்தாராம். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சண்முகசுந்தரம் அவரை கைது செய்தார். விசாரணையில் ...
கோவை பக்கம் உள்ள சின்ன தடாகம். மடத்தூர்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நித்யா ( வயது 32 )இவர் நேற்று துடியலூரில் இருந்து தனியார் கவுன்சில் கோவை ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பஸ் ஸ்டாப்பில் பஸ்சைவிட்டு இறங்கும் போது இவர் வைத்திருந்த பையைக் காணவில்லை .அதில் 3 பவுன் தங்க செயின், ரூ.52 ஆயிரம் ...
கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 50 )இவர் கோவை ஆர் .எஸ். புரம். பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கார் பார்க்கிங் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று குடிபோதையில் படம் பார்க்க வந்த 2பேர் அசோகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சபரி (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் ...