வேலையை விட்டு நிறுத்தியதால் பெண் ஊழியர் தற்கொலை- கோவை தொழிலதிபர் உள்பட 3 மீது வழக்கு.!

கோவை காட்டூர் காளப்பன் லேஅவுட்டை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் அனுப்பிரியா ( வயது 25 ) இவர் காட்டூர் செல்லப்பன் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மெட்டல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் திலகவதி, ஜோதி நகரை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் அனுபிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டினார்களாம். இதனால் மனம் வேதனை அடைந்த அனுபிரியா வீட்டிற்கு சென்றதும் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். இதைப் பார்த்த அவரது தாய் சிவகாமி அவரிடம் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்டார். அப்போது தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் திலகவதி, நாகராஜ் ஆகியோர் தன்னை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறினார்.இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணை தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஆர் எஸ் புரம் சேர்ந்த சிவகுமார் ( வயது 36 ) என்பவரிடம் திலகவதியும் நாகராஜனும் கூறினார்கள். அங்கு சென்ற சிவகுமார் ஊழியர் அனுப்பிரியாவின் கணக்கை முடித்து அவளை வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார்.இதனால் மனமுடைந்து வீட்டுக்கு சென்ற அனுபிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அனுப்பிரியாவின் சாவுக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போலீசார் அவரிடம் சமரசம் செய்தனர். இதையடுத்து பிணத்தை பெற்றுக் கொண்டனர்..இது தொடர்பாக அனுப்பிரியாவின் தாயார் சிவகாமி காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த திலகவதி ஜோதிபுரம் நாகராஜ் வயது 38) உரிமையாளரான ஆர் ,எஸ் புரம் சிவக்குமார் (வயது 36) ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.இவர்களில் ஊழியர் நாகராஜ் உரிமையாளர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திலகவதியை தேடி வருகிறார்கள்.