கோவையில் 56 குற்றவாளிகள் கைது.. ரவுடிகளின் லிஸ்ட் ரெடி.. அடுத்தடுத்த நடந்த கொலையால் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை நீதிமன்றம் அருகே மற்றும் ஆவாரம்பாளையம் ரோட்டில் 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த கொலையில் பலியான ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.பல இடங்களில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது .இந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், நீதிமன்றத்திலும் சிலர் சரணடைந்தனர்.இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் ஒரு தனிப்படை வீதம் மொத்தம் 15 தனி படைகள் அமைக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இன்று வரை 56 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில முக்கிய ரவுடிகளை தேடி வருகிறோம். ரவுடிகளின் “இன்ஸ்டாகிராம்” முடக்கப்பட்டுள்ளது. ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சீனாவில் தயாரிக்கபட்டது என்பது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிகளை இந்த ரவுடி கும்பலுக்கு வழங்கியது யார் ?என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளுடன் தொடர்பில் இருந்த சிலரையும் கண்காணித்து வருகிறோம். கோவையில் ரவுடிகள் முற்றிலுமாக ஒடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.