மியான்மரில் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். மியான்மரில் உள்ள சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில் நேற்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு முடிவு கட்டப்படும் என மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்த ...
ஆவடி : ஆவடியில் கட்டுமானப் பணியின் போது 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அடுக்கு மாடி குடியிருப்பின் மேலாளர், பொறியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் மத்தியரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ...
கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் வீரபாண்டி ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 47) தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.இவர் அங்குள்ள டி.வி.எஸ். நகர் சந்திப்பில் நின்று கொண்டு கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இவரை துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி நேற்று மாலை கைது செய்தார். இவரிடமிருந்து 727 கேரளா லாட்டரி ...
கோவை : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகன் விக்னேஷ் (வயது 22) இவர் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். மேலும் இவர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பகுதி ...
கோவை அருகே உள்ள கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது 30) அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சின்ன வேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் ...
கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் ஆகியோர் நேற்று மாலை குறிச்சி, வெங்கடாசலபதி நகர்,பகுதி உள்ள ஒரு சர்ச் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ...
கோவை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34) இவர் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் தங்கி இருந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பி. கே. எஸ். காலனி காமராஜ் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 73) இவரது மனைவி கமலம் (வயது 68 )இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர் . இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது .இந்த நிலையில் 3-வது மகன் செந்தில்குமார் ( வயது 40 )தனது மனைவியை ...
தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்ட சோதனையில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவப் படிப்பைப் படிக்காமல் பலர் மருத்துவம் பார்ப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் படி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 10 ...
திருவனந்தபுரம்: கேரளாவில் முழு ரயிலையும் எரிக்க ஷாரூக் ஷபி சதி திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட உள்ளது. கடந்த 2-ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் இருந்த ...













