கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த நாகர்கோவிலை சேர்ந்த ஹரேந்திரன் @ எர்வின் எவின்ஸ் என்பவர் போலீசாரால் கைது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், போலி தங்க பிஸ்கட், ரப்பர் ஸ்டாம்ப், ஏர் கன் துப்பாக்கி உள்ளிட்டவை ...
தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். அப்போது, சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள கல்குவாரி மூலம் ...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கள்ள மது விற்பனை அதிகம் நடப்பதாகப் புகார்கள் பல தொடர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீஸார், தொடர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக போலி மது விற்பனை செய்த பலரையும் போலீஸார் கைது செய்தனர். அதோடு, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்களுடன் ...
கோவை மாவட்டம் ஆனைமலை வள்ளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மது சந்திரன் (வயது 43 ) இவர் ஆனைமலையில் உள்ள பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பங்கில் வசூல் ஆன பணம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 860 ரூபாயை பாலிதீன் பையில் கட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார். அதை பூட்டவில்லை. ...
கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பொள்ளாச்சி அருகே ஆனைமலை ,திவான்சா புதூர்,கோட்டூர் கொசவம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கூடம் அருகே போலீசார் சோதனை நடத்தினர். ...
ஸ்காலர்ஷிப்’ வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர்கள், மாணவர்கள் விபரங்களை விலைக்கு வாங்கியதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர், பெற்றோர் விபரம், போன் நம்பர்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிப் படிப்பு முடித்து கல்லுாரியில் சேரும் மாணவ, மாணவியர் பலர், அரசிடம் கல்வி உதவித் ...
கோவையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி 7-வது தடவை கைது..! சென்னையில் உள்ள மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 16ஆம் தேதி இரவு செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார் .அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தான் ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தி உள்ளதாகவும், ,அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் ...
கோவை அருகே போலீஸ் நிலையம் முன் திருட்டு வழக்கில் சிக்கிய விசாரணை கைதி – லாரி மோதி பலி.. கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவில்குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பைக்கை திருட முயன்றார். அவரை ...
ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீவைப்பு..! கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்துக்கு நேற்று இரவு யாரோ 3 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று பெட்ரோல் ஊற்றிஅலுவலகத்துக்கு தீ வைத்தனர்.. இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்தி .சிவராஜ் ஆகியோர் ...
கோவை ஆர். எஸ். புரம் சுக்கிரவார் பேட்டையில் உள்ள 2 வீடுகளில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர் எஸ் புரம் போலீசுக்கு தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் நாகராஜ் ...











