கோவையை அடுத்த பேரூர் பக்கம் உள்ள முதலிபாளையம் குட்டை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கரடிமடை , முருகன் ,செம்மனூர் ஆறுச்சாமி ஸ்டீபன் ராஜ், கரடிமடை ரவி, உலகநாதன் ...

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் அங்கன்னன். இவரது மனைவி சுகந்தி (வயது 39) இவர் நேற்று கோவை பெரியகடை வீதியில் சாமான்கள் வாங்க தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தர்கா அருகேசென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் ...

கோவை அருகே உள்ள எட்டிமடை அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி . இவர் நேற்று துடியலூரில் இருந்து ஆர். எஸ் புரம், புரூ பீல்டுக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ 60 ஆயிரத்தை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அவரை ...

கோவை :ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் ஸ்ரீஹரினி (வயது 19) இவர் கோவை சுங்கம பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சுங்கம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினர் .அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக பாஸ்கரன் ( வயது 52) கைது செய்யப்பட்டார். இதே போல குளத்துப்பாளையம் பகுதி உள்ள ஒரு மளிகை கடையில் நடந்த சோதனையில் குட்கா ...

கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் ...

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது இத்ரீஸ், ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்து உள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 – ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்து. இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை ...

கோவை பக்கம் உள்ள ஆலாந்துறை பகுதியில் நொய்யல் ஆற்று படுகையில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுப்பதாக ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் மணல் திருடி கொண்டிருந்தது ...

கோவை அருகில் உள்ள குனியமுத்தூரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 62)நேற்று முன்தினம் நள்ளிரவில்  5 ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து அவரை கத்தியால் குத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்று விட்டனர்.பணத் தகராறு  காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த மருந்து கடை அதிபர் சோமசுந்தரம் அங்குள்ள தனியார் ...

கோவை ரத்தினபுரி பெரியார் நகர் பக்கம் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கோகிலா ( வயது 35) இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். 11 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவிதா என்பவர் கோகிலாவுக்கு போன் செய்து அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக ...