பட்டபகலில் வங்கியில் புகுந்து 2 லேப்-டாப்கள் திருட்டு..!

கோவை அவிநாசி ரோடு உள்ள லட்சுமிமில் சந்திப்பில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மதியம் வங்கி மேனேஜர் தமிழ்வாணன் சாப்பிட சென்றிருந்தார்.அப்போது யாரோ இவரது அறைக்குள் புகுந்து 2 லேப்டாப்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து வங்கி மேனேஜர் தமிழ்வாணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பட்டப்பகலில் வங்கியில் புகுந்து லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.