வேலை செய்த வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!

கோவை ஆர் .எஸ். புரம் , சர், சண்முகம் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 42) இவரது வீட்டில் இருகூர், கணபதி தேவர் வீதியை சேர்ந்த சாந்தி ( வயது 38) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி முதல் வேலைக்கு வராமல் திடீரென்று நின்று விட்டார்.அப்போது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 4 பவுன் தங்க வளையல்கள், பணம் ரூ 25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.இதுகுறித்து ஸ்ரீதேவி, ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சாந்தி மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் போலீசார் சாந்தியிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் இந்த திருட்டை நடத்தி இருப்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 4 தங்க வளையல் மீட்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.