கோவையில் துணிகரம்… பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 22 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை – முகமூடி கும்பல் 4 பேர் கைது.!!

கோவை மாவட்டம்: சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி மலையைச் சேர்ந்தவர் நித்திய நதி . (வயது 52) விவசாயம் செய்து வருகிறார். கடந்த மாதம் 13ம் தேதி இவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வீட்டினுள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் பீரோவில் இருந்த நகைகள் மொத்தம் 22 பவுன் நகைகள், 2 வைர வளையல்கள், ரூ. 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி .தங்கராமன் தலைமையில்,சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், ராஜேந்திர பிரசாத் பாண்டியராஜ் ஏட்டு மகராஜன் போலீசார் முத்துக்கருப்பன், அருண்குமார், சிலம்பரசன், செல்லப்பாண்டி ஆகியோர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் .நேற்று முன் தினம் தனிப்படை போலீசார் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குடியாத்தம் தாலுகா பாண்டியன் நகரை சேர்ந்த அய்யனார் என்கிற மீசை அய்யனார் (வயது 72) ஏழுமலை என்கிற ராஜா ( வயது 50) கர்நாடக மாநிலம் தாவணிக்க ரமா மாவட்டம் ,அருப்பு நெல்லி தாலுகாவை சேர்ந்த முருகன் என்கிற ராமு (வயது 55) உளுந்தூர்பேட்டை சாத்தனூரை சேர்ந்த ராமலிங்கம் என்கிற ராஜேஷ் (வயது 42) ஆகிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர் . இதையடுத்து கொள்ளையர்களிடம் இருந்து நித்திய நதி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 22 பவுன் நகைகள், 2 வைர வளையல்கள் அனைத்தும் மீட்க்கப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் பானையங்கால் புதூர் பகுதி சேர்ந்த அஞ்சு மலை என்கிற ஏழுமலை என்பவர் தேடப்பட்டு வருகிறார். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பிடிவாரண்டு இருப்பதாக தெரிகிறது.இந்த கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.