கோவை கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு..!

கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி .இவர் பேரூர் அனைத்து மகளீர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனியார் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தேன். அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த கவுதம் (வயது 20) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது .பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து நாங்கள் 2பேரும் செல்போனில் பேசியும் ,நேரில் சந்தித்தும் காதலை வளர்த்துக் கொண்டோம். கவுதம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என்னை மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாதாத இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து ஜனவரி 20 22 ஆண்டு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்த கவுதம் மீண்டும் ஆசை வாரத்தை கூறி உல்லாசமாக இருந்தார்.இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் நான் கர்ப்பமானேன்.இதுகுறித்து கவுதமிடம் கூறினேன். கர்ப்பமான விஷயத்தை யாரிடமும்  சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டினார். மேலும் அவர் என்னிடம் பழகுவதையும் பேசுவதையும் தவிர்த்து வந்தார். பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அவர் எங்கு சென்றார்?என்பது எனக்கு தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி எனக்கு திடிரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனே என்னை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு என் தாயார் அழைத்துச் சென்றார் .அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக என் தாயிடம் தெரிவித்தனர். அதற்கு யார் காரணம்? என்று என் தயார் கேட்டபோது நான் நடந்த சம்பவங்களை கூறினேன். எனவே என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி கர்ப்பமாக்கி ஏமாற்றிய கவுதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வறு அதில் கூறியுள்ளார் . அதன் பேரில் பேரூர் அனைத்து மகளீர் போலீசார் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து ‘கர்ப்பமாக்கிய காதலன் கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.