சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவைச் சென்றடைய முக்கியமான 10 படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். இந்த 10 படிநிலைகளை முக்கியமான மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம்… முதல் பகுதி படிநிலை 1 – புவியை மையமாக வைத்து விண்கலம் சுழலும் காலப் பகுதி. இது மூன்று நிலைகளை உள்ளடக்கியது. அவையாவன:- (அ) விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு முந்தைய ...

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாஜக திட்டம்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ...

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன. நேற்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.. இந்த கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டபோதே, 2 விதமான எதிர்பார்ப்புகள் எழுந்தன. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து ...

ஷாங்காய்: தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ள மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ என காலச்சூழல் மாறி வரும் நிலையில், சீனாவின் ஷாங்காயை தலமாக கொண்ட ஃபோரியர் இன்டலிஜெண்ட்ஸ் நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது. சீனாவில் 2035ம் ஆண்டுக்குள் 60 ...

பெய்ஜிங்: புகுஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்றுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுனாமி காரணமாக விபத்துக்கு உள்ளாகி செயல் இழந்த புகுஷிமா அணு உலையில் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் உள்ளது. அங்கே உள்ளே அணு ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த இப்போதும் நீர் பயன்படுத்தப்படுகிறது . இந்த நீர் ...

புதுடெல்லி: நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை, சந்திரன் குறித்த புதிய பார்வையை சந்திரயான் 3 உலகிற்கு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வந்து பல்வேறு புதிய ...

சென்னை: பொது சிவில் சட்டம் கொண்டு வரும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், மக்களவையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன், சமத்துவம், ...

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். ரயில் 120 நாட்களுக்கு ...

ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளி வருவதை முன்னிட்டு மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச்செயலாளர் பி.அழகர் என்பவர் 60-அடி நீளத்திற்கு பிளக்ஸ் வைத்துள்ளார். ...

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டனர். அன்று இரவே அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால், நெஞ்சு வலி ...