கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர். சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் ஆகியோர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த 4 நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சூரை சேர்ந்த ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, கடந்த ...
புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் உரையாற்றுவதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன் உரையாற்றும் ராகுல்காந்தி, ’21ம் நூற்றாண்டில் பாடங்களைக் ...
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் மோசமான சட்ட ஒழுங்கை கொண்டிருந்ததாகவும், தற்போது இந்த விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து ...
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை வந்த ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது என்ற கேள்வி எழுப்பி இருந்தது பல்வேறு தரப்பினர் ...
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் தலிபான் அரசின் தலைமையிலான படைகள் இரண்டு ஐ.எஸ் தளபதிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
சென்னைத் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த சேவையை சென்னைத் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவல் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி, சென்னைத் துறைமுகம் – புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை ...
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) ஆதார் அட்டையில் முக்கிய மாற்றமொன்றை செய்துள்ளது. அதென்ன மாற்றம்? அதனால் மக்களுக்கு என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம். நாட்டில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான மோசடிகளை தடுக்கும் முயற்சியின் ...
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முன்னெடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளை ஆடம்பரம் என்று கொண்டாட வேண்டாம் என்றும், பேனர் வைப்பது, போஸ்டர் அடிப்பது போன்ற ...
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் 1000 டன் குப்பைகள், வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் வெயில் காலங்களில், இந்தக் கிடங்கில் மீத்தேன் வாயு வெளியேறி தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதனால், அப்பகுதியில் ஏற்படும் புகை மண்டலத்தால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைக் கருத்தில் ...