ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில் இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ...

நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் இம்முறை ஹெகானி ஜக்லு, சல்ஹாட்டோ க்ரூஸ், ஹூகளி சீமா, ரோசி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் என்டிபிபி சார்பில் திமாபூர்-3 தொகுதியில் போட்டியிட்ட ஹெகானி ஜக்லு, அங்காமி தொகுதியில் போட்டியிட்ட சல்ஹாட்டோ க்ரூஸ் வெற்றி பெற்றனர். இதன் மூலம் நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளன. இதுதவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை ...

ஆந்திராவில் பெற்றோர்கள் பேச்சை கேட்டு 11 ஆண்டுகள் மனைவியை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்த வக்கீலின் கோர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து ...

புதுடெல்லி: திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) முன்னிலை வகிக்கிறது. திரிபுரா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சி திரிபுரா மக்கள் முன்னணி(IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ...

அண்ணா பல்கலைகழகம் சார்பில் நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி அண்ணா பல்கலைகழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சில ...

கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் ...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சளி,காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க ...

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே ...

பெங்களூரு: இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலானவர்கள் சர்வ காலமும் ஸ்மார்ட்போன், கணினி என ஏதேனும் ஒரு டிஜிட்டல் சாதனத்தில் நேரத்தை செலவிடுகிறோம். அதே நேரத்தில் தினசரி வழக்கமாக மேற்கொண்டு வரும் பணிகள் ஒருகட்டத்தில் விரக்தியை கொடுக்கும். அந்த வகையிலான விரக்தியை விரட்டி அடிக்க பெங்களூரு நகரில் ரேஜ் (Rage) ரூம் கான்செப்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த அறையில் விரக்தியில் ...