பிப்ரவரியில் GST வசூல் ரூ.1.50 லட்சம் கோடி.!!

டந்த பிப்ரவரி மாதத்தில் 1.49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக 27 ஆயிரத்து 62 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக 34 ஆயிரத்து 915 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக 75 ஆயிரத்து 650 கோடி ரூபாயும், செஸ் வரியாக 11 ஆயிரத்து 931 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.