கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணி அளவில், தரைத்தளத்திலும் முதல் தரத்திலும் உள்ள அந்த கடையில் இருந்து திடீரென்று புகை வந்தது.பிறகு தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் தீ மள மளவென பரவியது .இதை பார்த்தவர்கள் தீயணைப்பு ...

கோவை வாளையார் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி படித்து வந்த மாணவர்கள் 8 பேர் நேற்று அங்குள்ள வாளையார் அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது சண்முகம், திருப்பதி என்ற இரு மாணவர்களும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனர். தண்ணீரில் தத்தளித்த மற்றொரு மாணவனை அப்பகுதி மக்கள் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பிரிட்டோ காலனி உருமையன் வீதியைச் சேர்ந்தவர் அமுதவதி(42). இவரது கணவர் சின்னச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அமுதவதி தன் மகள் சாருஹாசினி(20) வசித்து வந்தார். சாருஹாசினி பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அமுதவதி தினமும் அவிநாசியில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று ...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 1994 – 1997 கல்வியாண்டில் பிஎஸ்சி இயற்பியல் பிரிவில் பயின்ற மாணவ மாணவியர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர் டாக்டர். கனக பிரபா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரியில் பயின்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வந்திருந்த ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய விளை நிலத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பேண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை எந்தவித அனுமதியும் இன்றி இயங்குவதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு ...

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 43வது வீரவணக்க நாள் அனுசரிப்பு.. கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சல் கும்பலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும்போது குண்டு வீசப்பட்டு காவல் ஆய்வாளர்  பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவலு மற்றும் காவலர்கள் யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ...

கோவை அருகே பள்ளிக்கூட ஆசிரியை தாக்கி மாணவன் படுகாயம்..!  கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.சம்பவத்தன்று வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ...

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முடிவு கட்ட மேஜர் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். பாட்டிலின் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் ...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். திரவுபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அடுத்த மசினகுடிக்கு வரும் அவா், பின்னர் சாலை வழியாக தெப்பக்காட்டில் உள்ள வளா்ப்பு யானைகள் ...

சென்னை: இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ள நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நேற்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த ...