கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில், இந்த மாநாடு சிறப்பாக அமையும். மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். இந்த ...

தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாகாவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் வரை ...

சிம்லா: இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இமாச்சலில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் ...

கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் தேவராஜ் நேற்று காலை மலுமிச்சம்பட்டி பகுதியில் வாடிக்கையாளர் காத்திருப்புக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் இரு கால் டாக்ஸிகள் மீது அதிவேகமாக மோதினார் இந்த சம்பவத்தில் கால் டாக்ஸி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மகளீர்களின் நலன் கருதி கோவை வந்திருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் அவருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழக அரசு தமிழகத்தில் மகளி ருக்கான கட்டணமில்லா பேருந்துகளை இயக்கி வரும் நிலையில் வால்பாறை பகுதியிலும் ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கிடையே  தாளவாடி மலைப்பகுதியில் உள்ள  நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை ...

கோவை தெலுங்குபாளையம் புதூர், பாரதி ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55) சலவை தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து இவரது அண்ணன் ரங்கசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் . ...

கோவை அவனாசி சாலையில் தெக்கலூர் அருகே இன்று காலையில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இதைப் பார்த்ததும் தனது காரை நிறுத்தச் சொன்னார்.காரை விட்டு இறங்கி வந்து அந்த வாலிபரை மீட்டு தனது காரில் தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராஜாராம் ( வயது 29) எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசிகா ( வயது 28) முதுநிலை பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது கடந்த ...