பெண்கள் குளியறையில் செல்போனை வைத்து அவர்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அடுத்துள்ள விருப்பம் பதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் .23 வயதான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ...

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தேடுதல் குழு அறிவிப்பை வெளியிட்டதை சட்டப்படி எதிர்கொள்வோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் ...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா நேற்று முன்தினம் (செப். 4) ...

போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் ...

உலகளாவிய புவிசார் அரசியல் காரணமாக பதட்டங்கள் இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்த முடியும் என்பதை ஜி-20 நாடுகளை இதற்கு முன்பு தலைமையேற்று நடத்திய இந்தோனேசியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்த இந்தியாவும் உறுதி செய்துள்ளது. வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜ-20 உச்சி மாநாடு ...

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த உச்சி மாநாடு தொடங்கும் 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரவு விருந்து அளிக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு ...

கோவை : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் குமார் ( வயது 28 ) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..காதல் தோல்வியால் அவர் தற்கொலை  செய்து கொண்டதாக ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள ஊஞ்சபாளையம், குட்டை தோட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். இவரது மனைவி திவ்யா ( வயது 31) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகன் உள்ளார். நேற்று இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அவரது மனைவி திவ்யா எடுத்துப் பேசினார். அப்போது எதிர்முனையில் ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் மூர்த்தி ( வயது 46) கூலி தொழிலாளி. இவர் நேற்றுஅங்குள்ள கணக்கம்பட்டி அரசு பள்ளிக் கூட ரோட்டில் மொபட்டில்சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறு சாக்கடை கால்வாயில் மொபட்டுடன் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரைசிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை : பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று கோவில்பாளையம்- சக்தி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ...