குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி சுமை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி, பள்ளிகளில் தற்காலிகமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும், நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை முறையை பின்பற்றவும், வெளிநாட்டு திருமணங்களை தவிர்த்து இந்தியாவிலேயே விழாக்கள் நடத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலகளாவிய ...

இந்தியாவைப் பொறுத்தவரை, உயர்ந்த எண்ணெய் விலைகள் இறுதியில் பெட்ரோல் நிலையங்களை விட மிக அதிகமானவற்றைப் பாதிக்கின்றன. கச்சா எண்ணெய் சார்ந்த பணவீக்கமானது போக்குவரத்து, பேக்கேஜிங், இரசாயனங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளில் பிரதிபலித்து, அன்றாட வீட்டுப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, மரிகோ, டாபர் இந்தியா, ஐடிசி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோத்ரேஜ் ...

தமிழக முதல்வர் விஜய்க்கு நாம் அவகாசம் கொடுப்போம். ஒருவேளை வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றால், நிச்சயம் சட்டப்பேரவையில் தேமுதிக சார்பில் கேள்வி எழுப்புவோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “என்னை வெற்றிபெற வைத்த விருதாச்சலம் தொகுதி மக்கள், மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் ...

தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இணையாக, சமூக வலைதளங்களிலும் புதிய முதலமைச்சர் சி.ஜே.ஜோசப் விஜய்யின் செல்வாக்கு விண்ணைத் தொட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்ஸ் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது. நேற்று வரை சுமார் 4 லட்சம் பேரால் மட்டுமே பின்தொடரப்பட்டு ...

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  10.05.2026 பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ...

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது வாசலில் நின்று விஜயை வரவேற்ற உதயநிதி ஸ்டாலின், கட்டியணைத்தார். தொடர்ந்து உள்ளே சென்ற விஜய், ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார். அப்போது இருவரும் பொன்னாடை போர்த்தி, புன்னகைகளையும் பூங்கொத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவர் ...

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இன்று (மே 11) காலை முதல் மத்திய அரசின் உயரிய பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ (Z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக டெல்லியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்னை வருகை தந்து தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்பட்ட சூழலில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிரடி ...

முதல்​வ​ராக பதவி​யேற்ற பின் முதல்​வர் ஜோசப் விஜய் அறி​வித்த திட்​டங்​களுக்கு பாமக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன.இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:  ராம​தாஸ்: முதல்​வ​ராக பதவி​யேற்​றவுடன் 200 யூனிட் மின்​சா​ரம் இலவச​மாக வழங்​க​வும், போதை ஒழிப்​புக்கு சிறப்​புப் படை உரு​வாக்​க​வும் முதல்​வர் ஜோசப் விஜய் முதல் கையொப்​பமிட்​டதை வரவேற்று நன்​றியை ...

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை அழைத்து எச்சரித்து இருக்கிறார் திருச்சி மாவட்ட எஸ்பியான செல்வ நாகரத்தினம். தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று ...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்ம கோபி பவுண்டேஷன் மகளிர் மேம்பாட்டு குழு இணைந்து நடத்தும் அன்னையர் தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர்க்கான போட்டிகள் பின்வருமாறு பேச்சுப்போட்டி பாட்டு போட்டி கோல போட்டி தீயில்லா சமையல் மெஹந்தி மேக்கப் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது . இப்போட்டியில் 300க்கும் ...