ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலியானது. இதனால் ரூ.54 கோடிக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து பகல் நேரங்களில் அதிகளவில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் பொதுமக்கள் மட்டுமின்றி ...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ரூபியோ, இந்தியாவிலிருந்து சட்டப்பூர்வமாக குடியேறுபவர்களின் கவலைகள், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவெறி கருத்துகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைமையுடன் அமெரிக்கா கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதே வேளையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு தனது வேகத்தை எந்த ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர புவிசார் அரசியல் பதற்றத்தின் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த 2 ...
கோயில்களில் காலாவதியான, தேதி குறிப்பிடப்படாத பிரசாதங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளார். இது ...
தமிழகத்தில் நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.இதையடுத்து மறு தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நீட் தேர்வில் பங்கேற்கவுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ...
முதல்வராக விஜய் பதவி ஏற்ற 13 நாட்களில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தூயசக்தியா அல்லது தூங்கும் சக்தியா? திமுக எனும் தீயசக்திக்கு மாற்றான தூயசக்தி நாங்கள் தான் என்று கூறிய விஜய் தமிழகத்தின் முதல்வராக ...
விசிக தலைவர் திருமாவளவன் கொள்கைகளிலும் கருத்தியலிலும் தடம் மாறத் தயாராகிவிட்டார் என விமர்சித்து, விசிகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கமாக இருந்த விசிகவுக்கு 6 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ...
இன்றும், நாளையும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளும் ...
தலைமைச் செயலகத்தில், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாக கொண்டு இதற்கென அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு ...
சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி ...












