ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வு நடைபெற்றுவரும் நிலையில், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் ...

குரங்கு அம்மை நோய் காற்றின் மூலம் பரவுமா என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது ...

சென்னை அருகே மாமல்லபுரத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதியில் முதல் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்நிலையில்,மாமல்லாபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட ...

பெங்களூர்: மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை 20.5 கிலோமீட்டர் தூரம் நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகம்-கர்நாடகம் இடையேயான போக்குவரத்தை பொதுமக்கள் வேகமாக மேற்கொள்ள முடியும். கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் ...

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது விருந்து நடந்து வருகிறது. விருந்தில் சுத்தமான சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது. இதோ அந்த உணவு வகைகள். பன்னிர் பட்டானிக்கறி பருப்புக் கறி அவியல் மோர் குழம்பு மிக்கன் செட்டிநாடு கறி உருளை கார மசாலா வாளைக்காய் வருவல் சென்னா கிழங்கு வருவல் சேப்பக்கிழங்கு ...

தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்காமல் பருவமழை பெய்து அணைகள் நிரம்பும் போது வெளியேறும் உபரிநீரை அதிகளவு ...

டெல்லி : சமூக வலைதளங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் வழங்கும் தீர்வுகளில் மாற்றுக் கருத்து இருப்பின், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனி அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு கமிட்டியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் விதிமுறையில் திருத்தம் செய்யப்படுவது ...

நாட்டின் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுவருவதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அதிரடியாக அறிவித்தார். உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை, பெட்ரோல்,டீசல் விலை இன்னும் குறையாததையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலும் 50 புள்ளிகள் வரை வட்டி உயர்ந்துள்ளது. இதனால், தற்போது கடனுக்கான ரெப்போ ரேட் ...

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் எண்ணிலடங்கா பக்தர்கள் மாலை அணிந்து இருமுடியும் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 14 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை ...

அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலூ தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தலைமையேற்று பேசிய எ.வ.வேலு செய்தியாளர்களை ...