கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். ஒட்டன்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. இன்சூரன்ஸ் புதுப்பிக்க மணிமாறன் பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததாக வழக்கு பதிவு செய்து அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தவிர நில ...

புதுடெல்லி: டிஜிட்டல் அல்லது இ-ரூபாய் புழக்கம் ரூ.130 கோடி அளவுக்கு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் ரூபாய் எனப்படும் இ-ரூபாயை ரிசர்வ் வங்கி, மொத்த விற்பனை பிரிவுக்கு கடந்தாண்டு நவம்பர் 1 முதலும், சில்லறைப் பிரிவுக்கு டிசம்பர் 1 முதலும் பரீட்சார்த்த ...

சென்னை: அதிமுக உறுப்பினர் அட்டையில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய உறுப்பினர் சேர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் படமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு கீழ் எடப்பாடி பழனிசாமியின் ...

இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா ஒரு பக்கம் இருக்க, இன்ஃப்ளூயன்சா ஏ வைரசின் துணை வகையான எச்3என்2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், முதியோரையும் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ...

தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி இந்த ஆண்டு ரூ.1.76 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது, மேலும் தமிழகம் இப்போது தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று மாநில அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சிஐஐயின் ‘முன்னோக்கி தமிழகத்தின் எழுச்சி’ என்ற மாநாட்டில் அமைச்சர் பேசினார். தமிழகத்தின் ‘லட்சிய $1 டிரில்லியன் இலக்கை’ பற்றி பேசுகையில், ...

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பீரங்கிங்களுக்கான 155 மில்லிமீட்டர் துப்பாக்கி, இலகுரக போர் விமானமான தேஜஸ், தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஆகாஷ் ஏவுகணை, சீட்டா ஹெலிகாப்டர், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் சென்னை உள்ளிட்ட பல பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் இதில் அடங்கும். கடந்த சில ஆண்டுகளில் ...

சென்னை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், அந்நிய முதலீடுகள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தை முதலீட்டுக்கான உகந்த மாநிலமாக மாற்றும் நடவடிக்கையாக, ஒற்றைச்சாளர முறை அனுமதி, நில வங்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு முதலீட்டாளர்களை ஒரே இடத்தில் ...

டெல்லி: நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறினார். மேலும் தேசிய நிதிமையமாகும் திட்டத்தின் படி ...

கோவை : தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை, சேரன் மாநகர் ராகம் கேக் ஷாப் அருகில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்த ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் ...

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 3 நாளாக அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 11-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 10ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41,520க்கு விற்பனை ...