கோவையில் குற்ற செயல்களை கண்டுபிடிப்பதற்கு 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டு கேமரா அறையை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.இதில் ...

நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களுடன் பங்கேற்ற இந்து மடாதிபதிகள், கிருத்துவ பாதிரியார்கள் – மலர்ந்த மத நல்லிணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை, மரபை தத்துவமாக வைத்திருப்பது இந்தியா. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் இருந்தாலும், யாவரும் இந்தியர்களே என்ற எண்ணத்தை ஓங்கி ஒலிக்கின்ற தத்துவமே வேற்றுமையில் ஒற்றுமை. இந்த நிலையிலே சமீபகாலமாக ...

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையிலே பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்கின்ற விதமாக கோயமுத்தூரில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றிருக்கின்றன . நோ ஹெல்மெட், நோ ரைடு … ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ் என்ற ...

கோவை கணபதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (வயது 31) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்பிய சுரேஷ் ரெட்டி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார் .அதில் தினமும் கிரிப்டோ ...

கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு நேற்று நடத்தப்பட்டது .கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 1,939 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக உக்கடம், காந்திபுரம்,சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தொட்டம்பாளையம் கிராமத்தில் புகுந்து துரைசாமி ...

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவரது மகள் நேத்ராவதி (36). நேத்ராவதிக்கும் கார்த்திக் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கார்த்திக் லட்சுமி நாராயணன் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். திருமணத்தின் போது 15 லட்சம் ரூபாய் பணம் 100 பவுன் ...

சென்னை: இந்தியாவில் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய ஒழுங்கு முறை விதிகள் இருந்தாலும், மருத்துவ உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவற்றை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரிவு சி மற்றும் டி வரையறைக்குக் ...

சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பண நெருக்கடியில் உள்ள இலங்கை சீனாவிற்கு ஒரு லட்சம் டாக் மக்காக் என்ற குரங்கு வகைகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ...

இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி சர்ச்சை கருத்து பரப்பியதாக பாபா ராம்தேவ் மீது பதியப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் நடந்த ஒரு மத நிகழ்வில் பேசிய யோகா குரு பாபா ராமதேவ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தும் ...