கோவை வாலிபரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ 9 லட்சம் நூதன மோசடி..!

கோவை கணபதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (வயது 31) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்பிய சுரேஷ் ரெட்டி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார் .அதில் தினமும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப லாபம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுரேஷ் ரெட்டி அதில் குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கிற்கு முதல் கட்டமாக ரூ.18 ஆயிரம் முதலீடு செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு ரூ.24 ஆயிரத்து 350 கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. பின்னர் சுரேஷ் ரெட்டி அவருக்கு சொந்தமான 2 வங்கி கணக்குகளில் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ 9 லட்சத்து 11 ஆயிரம் முதலீடு செய்தார். இந்த தொகைக்கு கமிஷன் தொகையாக 13 லட்சத்து 59 ஆயிரத்து 600 கிடைத்துள்ளதாக மோசடியாக குறுஞ்செய்தி வந்தது. இந்த தொகையை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற சுரேஷ் ரெட்டி முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அப்போதுதான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் மர்ம ஆ சாமிகள் போலியான லிங்க் அனுப்பி அவரிடமிருந்து ரூ. 9 லட்சத்து 11 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சுரேஸ் ரெட்டி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..