கோவை :மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர்கணேசன் (வயது 55) இவரது மனைவி ஜெயலட்சுமி. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கணேசன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் மளிகை கடையில் இருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். கடைக்கு எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடைக்கு ஒட்டி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அவர்களிடம் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சிந்து ...
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற ...
அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு அக்கட்சியின் முதல் மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கே.பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவை இந்த மாநாட்டுக்கு திரளும் கூட்டத்தை வைத்து நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் ...
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது. நேர்மறையான ...
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து ...
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா பெங்களூரில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடக சட்டடசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி தேர்தல் முடிவு வெளியானதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ...
கோவையில் மாயமான சிறுமி: பொள்ளாச்சியில் மீட்பு நேற்று ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் சுதாகரன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்டது. ...
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஓர்அங்கம், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் “ஜல்லிக்கட்டுப் போட்டிகள்” நடத்த தடை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில், பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் ...
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 54) ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்..இவரது ஒர்க் ஷாப்பில் இருந்து 100 மீட்டர் எலக்ட்ரிக்கல் மின்கம்பியை யாரோ திருடி சென்று விட்டனர் ..இது குறித்து பழனிசாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் வழக்கு பதிவு செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபன்தாஸ் ( வயது ...













