நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ஒரு குட்டியும் வந்தது. காட்டெருமைகள் மேய்ந்து கொண்டே சென்றன. அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தது.
இதனை அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பார்த்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனசரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், விரைந்து வந்தனர். கம்பி வேலியில் சிக்கி தவித்த காட்டெருமை குட்டியை மீட்டு அதற்கு தேவையான பால் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் குட்டியை தாயுடன் சேர்க்க முடிவு செய்து, தேயிலை ேதாட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.அப்போது சிறிது தொலைவில் காட்டெரு மைகள் கூட்டமாக நிற்பதை பார்த்தனர். இதையடுத்து அருகில் கொண்டு காட்டெருமையை குட்டியை விட்டனர். தாயிடம் காட்டெருமை குட்டி சேரும் வரை அங்கு நின்று கண்காணித்தனர்.குட்டி தாயிடம் சேர்ந்து உற்சாகத்துடன் சென்றதை பார்த்து விட்டு வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.