சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா போக்சோவில் கைது..!

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே அவரது தாயாரின் அக்கா வசித்து வருகிறார். அவரின் கணவர் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
பெரியப்பா என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட அவர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து சிறுமியை கடந்த 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பெரியப்பா பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் பெரியப்பா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.