கோவையில் படிக்க பணம் இல்லாததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை போத்தனூர் அருகே உள்ள சித்தண்ணாபுரத்தை சேர்ந்தவர் சார்லஸ் பாபு, இவரது மகள் ஏஞ்சல் எலிசபெத் ( வயது 17)பிளஸ் 2பரீட்சையில் தேர்வாகி இருந்தார்.இவரை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் ( சி ஏ )சேருவதற்காக இவரது தந்தை முன் பணம் செலுத்தியிருந்தார்.பின்னர் அவரால் முழு தொகையும் செலுத்த முடியவில்லை.இதனால் ஏஞ்சல் எலிசபெத் கல்லூரியில் சேர முடியாது நிலை ஏற்பட்டது.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஏஞ்சல் எலிசபெத் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை பில்லரில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் லீமா ரோஸ் போத்தனூர் போலீசில்புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.