நட்சத்திர ஓட்டலில் ரூ. 11 லட்சம் மோசடி,கணவன்- மனைவி மீது புகார்….

கோவை ரேஸ் கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலில்வரவு -செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ஓட்டலுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ11 லட்சம் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஓட்டல் மேனேஜர் சுமன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் அதே ஓட்டலில் கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வந்த பெல்லாதி ,டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பிரகாஷ் அவரது மனைவி மோகனபிரியா மீது மோசடி உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.