கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் வென்ஸ்டிசோசா (வயது 31)இவரது கடையில் அரவிந்த் என்பவர் தனது பி.எம். டபுள்யூ சொகுசு காரை பழுதுபார்க்க கொடுத்திருந்தார். காரை பழுது பார்த்த நிலையில் அரவிந்த் காரை எடுத்து சோதனை செய்துவிட்டு ஒர்க்ஷாப் அருகே நிறுத்திவிட்டு உரிமையாளர் வென்ஸ்டி சோசாவிடம் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நடூர் ஏ.டி. காலனியை சேர்ந்த அபிஷேக் (வயது 26) என்பவர் பணிபுரிந்து வந்தார் .இவர் போலி ஆவணம் தயாரித்து வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இதுகுறித்து தலைமை வசூல் மேலாளர் ரமேஷ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய ...

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிற்கு சொந்தமாக கரூரில் உள்ள அவரது அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு இன்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். மேலும் அதன் அருகே ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ...

சென்னை: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது’ என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன் வசம் ...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை செய்து வந்த நிலையில் இன்று காலை அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் 10 பேரில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் இடம் ...

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை இன்று நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு 160/100 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனையடுத்து, ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ...

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. ...

பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” 2014ஆம் ஆண்டுகக்கு முன்பு ஊழலை மட்டுமே மையமாக வைத்து திமுகவும் ...

சென்னை: செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ...

கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் சீமான் (வயது 48) கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் காந்திபுரம் சித்தாபுதூரில் ஒரு சீட்டு கம்பெனியில் மாதம ரூ 10 ஆயிரம் செலுத்தி வந்தார்.ரூ 2 லட்சம் செலுத்திய பிறகும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தை ...