கோவை ஒண்டிப் புதூர்,எஸ். ஐ. எச். எஸ் காலனியை சேர்ந்தவர் குமார், இவரது மகன் சந்தோஷ் ராம்( வயது 21) இவர் நேற்று தீபாவளி துணி எடுப்பதற்காக ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணி கடைக்கு சென்றார்.அவரை அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் வழிமறித்து தங்கள் கடைக்கு வருமாறு கூவி அழைத்தனர். அவர் செல்லாததால் ...
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ராவநத்து கோலனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன்கள் உதயகுமார் (வயது 27) ஆறுச்சாமி ( வயது 23) குடிபோதையில் அண்ணன் -தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த அண்ணன் உதயகுமார் தம்பி ஆறுச்சாமியை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் அருகே நீலாம்பதி வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ...
கோவை கணபதியை சேர்ந்தவர் தர்மராஜ் ( வயது 32) இன்ஜினியர். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பணம் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நான் என் வீட்டில் ...
திருவனந்தபுரம்: கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியான களமசேரியில் ஒரு அரங்கத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெபக் கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் ...
டெல் அவிவ்: காசா மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசா மீதான ஏவுகணை தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில், அதற்கு இஸ்ரேல் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. காசா ...
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2022 செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது ஏழை, நடுத்தர மக்கள் கூட, இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ...
திருவனந்தபுரம்: எஜமானர் இறந்தது தெரியாமல் சவக்கிடங்கு முன்பு 4 மாதமாக வளர்ப்பு நாய் காத்துக்கிடக்கிறது. கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை சவக்கிடங்கின் நுழைவு வாயிலில், தன் எஜமான் பூமியை விட்டு விடைபெற்றது தெரியாமல் ஏக்கத்துடன் காத்துக்கிடக்கிறது. நாய்கள் நன்றியுள்ள பிராணி.. தனக்கு உணவளித்தவர்களை ஒரு போதும் தாக்காது. தன் மீது அன்பு காட்டுபவர்கள் மீது, அவர்கள் ...
கோவை டாக்டர் வீட்டில் நகை- வெள்ளி பொருள் திருட்டு,.! கோவை அருகே உள்ள வடவள்ளி, ராமசாமி நகர், நேருவைதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 33 ) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டுகுடும்பத்துடன் சென்னையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். ...
ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 4 மாதங்கள் தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது..! கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவராக ஜோசி நிர்மல் குமார் பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இதை ...













