திருச்சியில் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர் பத்து ரூபாய் நாணயங்களாக 25,000 ரூபாய் கொண்டு வந்தது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளானது நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ...

சென்னை : ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில் பயணியிடம் ரூபாய் மூன்று லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைக் கொண்டு வந்தவர் பெயர் பாலு பரமேஸ்வரன் சதீஷ் சப் இன்ஸ்பெக்டர் பாலு சிறப்பு உதவி ஆய்வாளர் உமா தலைமை காவலர் ஷாபி காவலர்கள் தியாகராஜன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பாலு பரமேஸ்வரனிடமிருந்து ...

 எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் என ஓ.பி.எஸ் பேச்சு ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறும் போதும், “என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி ...

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆயிரத்து 228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோ மீட்டர் தூரம் உள்ள நெடுஞ்சாலைகளில், 48 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ...

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்  கோரிக்கை விடுத்துள்ளது. பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்த கூட்டத்தில் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா பங்கேற்கவில்லை.  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்   14 உறுப்பினர்கள் முன்னிலையில் இருந்தபோது, 10 உறுப்பினர்கள் இந்தத் ...

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்… “எனக்கு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. கலைஞர்தான் என்னை போட்டியிடச் சொன்னார். என்னிடம் தேர்தலுக்கு பணம் இல்லை ...

தூத்துக்குடி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று (மார்ச் 26) காலை வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், ...

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. கடந்த 2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ம் ஆண்டு ...

தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய முடியாவிட்டால் அடுத்த நாளே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார் அமைச்சர் மூர்த்தி. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ...

வேட்பு மனுத் தாக்கலில் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது `தமிழ் தெரியாது’ என்று விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூறினார். இதையடுத்து ஆட்சியர் வாசிக்க, பின் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27). மருத்துவரான இவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் ...