பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் ...
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநகர பேருந்து இயக்கத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளித துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய மாநகரப் பேருந்து சேவையை துவக்கி வைத்தார். திருவெறும்பூர் அருகே உள்ள குத்தைப் பார் பேரூராட்சி பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ...
கோவையில் ஒரே நாளில் 4 மாணவ – மாணவிகள் மாயம்… கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார். இவரது மகள் சத்யா (வயது 20) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு ...
கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தேவனூர் புதூரை சேர்ந்தவர் ராஜிவ் ஆனந்த் (வயது 40) விவசாயி. கடந்த 25 ஆம் தேதி இவரது தோட்டத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து 200 தேங்காய்களை திருடி சென்று விட்டனர் . இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ...
கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தியும் நேற்று மினி மராத்தான் ஓட்ட போட்டி நடந்தது. மராத்தான் போட்டியை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி .ஜி . பி . சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மராத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார் .2 ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை மணியக்காரன் பாளையம், மகாலட்சுமி நகரில் வீடு வாடகை எடுத்து அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பதாக பெரியநாயக்கன்பாளையம்போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில்அழகிகளை வைத்து விபச்சாரம்நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை விளாங்குறிச்சிஅம்பேத்கார் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு ஒரு கும்பல் அறை எடுத்து தங்கியது. அவர்கள் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த லாட்ஜில் வரவேற்பாளர் விஷ்ணு பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பப ...
கோவை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53 ) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் சூலூர் பள்ளபாளையம் பாரதிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவரது மகன் முருகேசன் (வயது 20) அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் முருகேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
சென்னை : தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக ‘டாஸ்மாக்’ கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், ...
பா.ஜ.க. ஆதரவுடன் 9-வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ் குமார்.அவருக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் பா.ஜ.க.வை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாகவும், 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டார். பீகாரில் மொத்தமுள்ள 243 இடங்களில் ஆர்ஜேடி 79 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் ...












