முகமூடி அணிந்து வந்த குற்றவாளி நான் வெட்டி கொலை செய்தது ஃபாரின் ஸ்டைல்…  முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என சொல்லி தப்பி ஓட்டம்.. ஆவடியை அடுத்த அண்ணனூர் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன் வயது 64. திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார். இவரது 2 வது அன்பு மனைவி ஷர்மிளா வயது ...

ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது. மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர். அவர்கள் ...

கோவையை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மற்றும் வீடியோக்களில் விளம்பரங்களை பார்த்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ 1000 வரை வருமானம் ஈட்டலாம் என்று ...

பாஜக கட்சிக்கு கடந்த 2022-23 நிதியாண்டில் நன்கொடை மூலம் ரூ.2360.84 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையை விட 5 மடங்கு அதிகம். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தங்களின் வரவு, செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ரூ.20,000-க்கு மேல் நன்கொடை ...

திருவள்ளூர்: கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை, அறநிலையத்துறை அதிகாரிகளின் கேளிக்கைக்கு செலவாகிறதே தவிர, ஆன்மீக மேம்பாட்டுக்கு இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனால்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத் துறை கலைக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 ...

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

கோவை : பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை வெரைட்டி ஹால் சி.எம்.சி. காலனி பகுதியில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்கு ...

குருவாயூர் கோயிலில் இருக்கு கிருஷ்ணா மற்றும் சிவன் யானையை பாகன்கள் துன்புறுத்திய சம்பவத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னுமிடத்தில் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்திய அளவில் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழும் குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குருவாயூர் கோயில் ...

உலகின் மிகப்பெரிய ஓம் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோவிலில் இன்று திறப்பு விழா நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து 71 கி.மீ. தொலைவில், பாலி மாவட்டத்தில் ஜடான் கிராமத்தில், சுமார் 250 ஏக்கர் நில பரப்பளவில் பிரமாண்டமான சிவன்’ கோவில் கட்டுவதற்கு 1995ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பிரணவ மந்திரமான “ஓம்” வடிவில் ...

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் 20 நாட்களாக இப்பணி நடைபெறுகிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வன்புல்புரா ...