தேர்தல் விதிமுறை மீறில்… பா.ஜ.க, திமுக பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு..!

கோவை : பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் வசந்த ராஜன் .இவர் நேற்று போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது இவருடன் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் அணிவகுத்து வந்தன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாமோதர தாஸ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் ,குறிச்சி மண்டல தலைவர் பிரகாஷ் ,அதிமுக நிர்வாகி மணிமாறன், மற்றும் பாஜக நிர்வாகிகள் முரளி, வரதராஜ், கோகுல், வெற்றிவேல், வரதராஜன் ,சுரேஷ் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் உள்ள அரவான் கோவில் திடலில் நேற்று திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் அருண் ( வயது 30) என்பவர் பட்டாசு வெடித்தார். இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜயகுமார் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.