கோவை காந்திபுரம் 48வது வார்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தொகுதிகளில் ...

கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை – நாகா்கோவில் ரயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும். பயணிகள் வசதிக்காக கோவை – மதுரை இடையே நேரிடையாக விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், கோவை – ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீசார் நேற்று அங்குள்ள சேரன் மாநகர், விளாங்குறிச்சி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வேகமாக வந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது ...

கோவை: ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணியாற்றியவர் சிவசுப்பிரமணி (வயது 51) சேலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில் தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தை முறையாக கணினியில் பதிவு செய்யவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் கணக்கு புத்தகத்தில் ...

கோவை சிங்காநல்லூர் நேரு பார்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லி ன் பின்புறம் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவருக்கு 50 வயது இருக்கும். அவரது தலையில் காயம் இருந்தது. அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து சவுரிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ( பொறுப்பு ) நிர்மலா சிங்காநல்லூர் ...

கோவை: கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ...

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டுயானை ஒன்று நடமாடி வருவது கண்டறியப்பட்டுள்ளது. யானையின் வாய் பகுதியில் காயம் ...

கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாபு (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவன்-மனைவி ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பாபுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறியதாக தெரிகிறது. இது நாளடைவில் அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ...

கோவை அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த 14 வயது மாணவி. இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தினசரி பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவது வழக்கம். அப்போது அந்த பஸ்சில் கண்டெக்டராக வேலை பார்த்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்த சகாதேவன் (வயது 25) என்பவருடன் பழக்கம் ...

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு பேஸ்புக் மூலமாக வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகினர். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது ...