போதையில் இருந்த வடமாநில தொழிலாளியை பைக்கில் கடத்தி சென்று பணம், செல்போன்,செயின் பறிப்பு..!!

கோவை : நேபாளம் நாட்டை சேர்ந்தவர் லட்சுமணன் பாரதி ( வயது 24)இவர் கோவை அருகே உள்ள ராக்கி பாளையத்தில் வசித்து வருகிறார்.இவர் தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் கோவை ரயில் நிலையம் வந்தார.ரயில் புறப்படுவதற்கு தாமதமானதால் லட்சுமணன் பாரதி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். பின்னர் போதையில் ரயில் நிலையம் செல்வதற்கு அவருக்கு வழி தெரியவில்லை. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரிடம் ரயில் நிலையம் செல்ல வழி கேட்டார்.அவர்கள் நாங்கள் கொண்டு போய் விடுகிறோம் என்று பைக்கில் ஏற்றிக் கொண்டு ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு பதிலாக சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்த பணம் ரூ. 10 ஆயிரம், செல்போன் ‘வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து லட்சுமணன் பாரதி இராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.