கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு- எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி கைது..!

கோவையில் கடந்த 22ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, வி கே.கே மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகம் 100அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க .நிர்வாகி அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது .இதில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர் .இந்த நிலையில் நேற்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை சித்தாபுதூர் வி. கே கே மேனன் ரோட்டில் உள்ளபா.ஜ.க .அலுவலகம் மீது கடந்த 22 -ம் தேதி மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் எரிபொருள் நிரப்பிய பாட்டிலை வீசினர் .இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது .இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட துடியலூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 31 )என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும்படி தீவிர படுத்தப்பட்டுள்ளது .மேலும் அவர்கள் மீது இரு பிரிவினர் இடையே பிளவு ஏற்படுத்துதல், ஆட்கள் குடியிருக்கும் பகுதியில் தீ வைத்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சதாம் உசேன் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குனியமுத்தூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரையும் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது கோவை வடக்கு போலீஸ் துணை கமிஷனர்மாதவன் உடன் இருந்தார். கைது செய்யப்பட்ட சதாம் உசேன் ஆரம்பத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் துடியலூர் பகுதி பொறுப்பாளராக இருந்துள்ளார். .தற்போது எஸ்.டி .பி .ஐ .கட்சியில் உள்ளார்.