சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் ரூ.599 மதிப்புள்ள புதிய எஃப்டிடிஎச் இணைப்பு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் 75 நாள்களுக்கு ரூ.275க்கு வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.999 மதிப்புள்ள ஓடிடி உடன் எஃப்டிடிஎச் திட்டம் 75 நாள்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.775க்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ...
கோவை: கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார். இவரது மகன் அக்னீஸ்வரன் (வயது17).இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரிடம் சிறந்த கல்லூரியில் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர தாங்கள் உதவி செய்வதாக கோவை ரத்தினபுரியில் செயல்பட்டு வரும் தனியார் அறக்கட்டளையினர் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறினர். இதனையடுத்து மாணவர் அக்னீஸ்வரன் அறக்கட்டளை அலுவலகத்திற்கு தன்னிடமுள்ள கல்வி அசல் சான்றிதழ்களை அனுப்பினார். ...
கோவை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:- நீலாம்பூர் முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி ...
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் உள்ள அரக்காடு பகுதிக்கு ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்சில் அரக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தினமும் சென்று பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் இருந்து அரக்காடுக்கு செல்லும் பஸ்கள் ...
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் நடுகூடலூா் பகுதியில் பல வீடுகளின் சுவா்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இந்த விரிசல் எப்படி ஏற்பட்டது என தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. பல வீடுகளில் சுவா் பிளந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு இது குறித்து ...
திருச்சி: தமிழகத்தின் நிதிநிலை அதலபாதாளத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி அமைக்கவோ, சமரசம் செய்யவோ ஒரு குறைந்தபட்ச தகுதி வேண்டும். அந்த தகுதி திமுகவுக்கு கிடையாது. எனவேதான், முதல்வர் அதை ஒப்புக்கொண்டு பாஜகவுடன் சமரசம் இல்லை எனக்கூறி இருக்கிறார். ‘டெல்லிக்கு செல்வது ...
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ...
சண்டிகர்: பஞ்சாப் வேளாண் துறையில் ரூ.150 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் குல்தீப் சிங், மாநில வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.150 ...
திடீர் திருப்பம்: வங்கிக் கொள்ளை வழக்கு – சிக்கிய அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட்!!
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளை போனது. இந்த விவகாரத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ...
கோவை ரயில் நிலையம்: ரயில்வே கமிட்டி தலைவர் உள்பட 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு செய்தது. “ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட்” திட்டத்தில் கோவை ரயில் ...