கோவை. ஆலந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் ஆனந்தகுமார் ( வயது 26) தனியார் நிறுவன ஊழியர் இவர் கடந்த ஆண்டு கோவை ரேஸ் கோர்சில் செயல்பட்டு வந்த தனியார் ஆன்லைன் வணிக நிறுவத்தினர் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் அதன் படி ...

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் சேர்ந்தவர் அசோக் குமார் இவர் அங்குள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவரது வலது காலில் பாம்பு கடித்தது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி ஸ்ரீவித்யா சூலூர் ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள  கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 31) டிரைவர் .இவரது மனைவி நந்தினி பிரியா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். சங்கர் குடிப்பழக்கம் உடையவர்-இதனால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி நந்தினி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், நெசவு தொழில் செய்துவருகிறார். இவரது மகன் தன்யா வர்ஷினி ( வயது 17) நெகமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார் .இவர் தீராத வயிற்றுவலி அவதிபட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்து அவரது வீட்டில் சுடிதார் ...

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் ஒரு தோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 453.95 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக ஈச்சனாரி ...

சென்னை:முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன், பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த ...

தனியார் பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதையடுத்து ஆவின் பால் பாக்கெட்டின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அரசின் ஆவின் நிறுவனம், 38.26 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ளவற்றை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தமிழகத்தின் பால் தேவையில் ...

ஆட்டை விஷம் வைத்து கொன்று விட்டுனர்:  நீதி கிடைக்கவில்லை- கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிப்பெருக்கியுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட நபரால் பரபரப்பு  கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர்(செந்தில், பாண்டியன், பழனிச்சாமி) இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக ...

புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த 10 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் பட்ஜெட் ...

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரினால் கோதுமையின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. போர் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கிருந்து கோதுமை ...