இந்தியாவில் யானைகள் காடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களிலும் வாழ்கின்றன. இந்த யானைகள் தனிப்பட்டவர்களாளும் வளர்க்கப்படுகிறது. அப்படி வளர்க்கப்படும் யானைகள் மனிதர்களோடு பழகி மனிதர்களை போலவே சில விஷயங்களை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. அதில் யானை ஒன்று பானிபூரி விரும்பி சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் தெரு ஓரம் உள்ள கடை ஒன்றில் ...

கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் ...

நமது அரசு 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு தேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. எல்லா வீடுகளுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கியுள்ளோம் – என இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பெருமிதம். இந்தியாவில் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று இமாச்சல பிரதேசத்தில் ...

சென்னை : பாஜக நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழகம் திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு, கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர். முன்னதாக, பாஜக நிர்வாகிகள், பத்திரிகையாளரை தாக்க முயன்ற சம்பவம் ...

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் ...

வாஷிங்டன்: உலகின் டாப் 20 பொருளாதாரங்களை உள்ளடக்கி உள்ள ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் நிலையில், இது தொடர்பாக முக்கிய கருத்துகளைச் சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளார். வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஓராண்டிற்கு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வரும். ஜி-20 என்பது சர்வதேச அளவில் ...

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மு க ஸ்டாலின், பொதுக்குழு கூட்டத்தில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். அதில், “மழை பெய்தாலும் என்னை தான் திட்டுகிறார்கள், மழை பெய்யவில்லை என்றாலும் என்னை தான் திட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்தவுடன், இன்று கட்சிக்காரர்கள் என்ன பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே எழுந்திருக்க ...

கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எஃப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எஃப்., அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த ...

கோவை துடியலூர் அருகே உள்ள என் .ஜி.ஜி. ஓ காலனி, அமராவதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள்  கீர்த்திகா( வயது 18) கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி துடியலூர் போலீசில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் உள்ள 12-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக சாலை ஒன்று இருந்தது. ஆனால் அந்த சாலை கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதோடு, பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையும் ...